ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் டி.வியின் நட்சத்திர நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் ஜூனியர். 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பாடும் இந்த நிகழ்ச்சி பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் பிடித்த நிகழ்ச்சி. மழலை குரலில் அவர்கள் பாடும்போது கானமழை பொழியும். இதுவரை 4 சீசன்களை வெற்றிகரமாக முடித்த சேனல் இப்போது 5வது சீசனை ஒளிபரப்ப இருக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்கான குரல் தேடல் தமிழ்நாடு முழுவதும் முக்கியமான நகரங்களில் நடந்தது. தற்போது தேர்வு பெற்றவர்களை கொண்ட நிகழ்ச்சியின் படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதன் இறுதி சுற்று நிகழ்ச்சி பொதுமக்கள் முன்னிலையில் நடக்கும். டைட்டில் வெல்பவருக்கு வீடும், இரண்டாவது இடம் பிடிப்பவருக்கு தங்கமும் பரிசாக வழங்கப்பட இருக்கிறது. இந்த நிகழ்ச்சி வருகிற 26ந் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.