'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அறிமுக இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் தயாராகி வரும் அறம் படம் நயன்தாராவின் 55 ஆவது படமாக வெளிவர உள்ளது. பெயரிடப்படாமல் வளர்ந்து வந்த இந்தப் படத்துக்கு நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அறம் என்ற தலைப்பை வைத்திருக்கிறார்கள்.
கதாநாயகன்களுடன் டூயட் பாடும் வழக்கமான வேடங்களில் நடித்து வந்த நயன்தாரா சமீபகாலமாக தனக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கனவே அவர் நடித்த 'நீ எங்கே என் அன்பே', 'மாயா' போன்று கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள படங்களின் வரிசையில் அறம் படமும் சேரக்கூடும்.
இந்த படத்தில் கலெக்டராக நடித்து வருகிறார் நயன்தாரா. இந்த கேரக்டரை மையப்படுத்திதான் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.