ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஹிந்திரையுலகில் முன்னணியில் இருக்கும் இளம் ஹீரோக்களில் ரன்வீர் சிங்கும் ஒருவர். தற்போது இவர், இயக்குநர் ஆதித்யா சோப்ரா இயக்கத்தில் உருவாகி வரும் ‛பெபிகர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை வாணி கபூருடன் ஏராளமான முத்தக்காட்சியில் நடித்திருக்கிறார் ரன்வீர். இதனிடையே சமீபத்தில் நடந்த ‛பெபிகர் படத்தின் இசை வெளியிட்டு நிகழ்ச்சியில் ரன்வீர் சிங்கும், வாணி கபூரும் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்ற ரன்வீர் சிங்கிடம், இம்ரானை போல நீங்களும் முத்தக்காட்சியில் எல்லாம் நடித்திருக்கிறீர்கள் ஆகையால் உங்களை இம்ரான் ஹாஸ்மி 2 என்று சொல்லலாமா..? என்று கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த ரன்வீர்...."எனக்கு யாரையும் பன்பற்றி நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. யாருடைய சாயலும் எனக்கு தேவையில்லை, நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்" என்றார்.
ரன்வீர், தற்போது தனது ஆஸ்தான இயக்குநரான சஞ்சய் லீலா பன்சாலி படத்தில் ‛பத்மாவதி படத்தில் நடிக்கிறார். இவர் நடித்துள்ள ‛பெபிகர் படம் அடுத்த மாதம் 9ஆம் தேதி வெளியாக இருக்கிறது.