Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குருவின் மகனுக்கு வாய்ப்பு தந்த பார்த்திபன்

18 நவ, 2016 - 12:24 IST
எழுத்தின் அளவு:
Parthiban-give-chance-to-his-gurus-son

'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்திற்குப் பிறகு பார்த்திபன் இயக்கி வரும் படம் 'கோடிட்ட இடங்களை நிரப்புக'. இந்தப் படத்தில் நாயகனாக பார்த்திபனின் குருவான பாக்கியராஜின் மகன் சாந்தனு நாயகனாக நடிக்கிறார். நாயகியாக பார்வதி நாயகர் நடிக்கிறார். பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் தம்பி ராமையா, சிங்கம்புலி இவர்களுடன் சிறப்புத் தோற்றத்தில் சிம்ரன், அருண் விஜய் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

பாக்கியராஜின் மகனான சாந்தனு பல படங்களில் நாயகனாக நடித்திருந்தாலும் அவருக்கு இன்னும் பெரிய திருப்புமுனையான படங்கள் எதுவும் வரவில்லை. அப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் சாந்தனுவுக்கு தன் படத்தில் நாயகனாக நடிக்கும் வாய்ப்பை வழங்கியிருக்கிறார் பார்த்திபன்.

அது குறித்து அவர் பேசும் போது, “கதை, திரைக்கதை, வசனம் இயக்கம்' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட வந்தார் சாந்தனு. அப்போது லாரன்ஸ், இவ்வளவு அற்புதமா நடனமாடறாரு, ஆனால், அவரை யாருமே சரியா பயன்படுத்திக்க மாட்றாங்க எனச் சொன்னார். இந்தப் படத்திற்காக நானும் பல பேரைப் பார்த்தேன். ஆனால், சாந்தனுவைப் பார்த்து பேசும் போதெல்லாம் அவரை நடிக்க வைத்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தேன். படத்தை எடுத்து முடித்த பின், அந்தக் கதாபாத்திரத்தில் அவரைத் தவிர வேறு யாரும் பொருத்தமாக நடித்திருக்க முடியாது என்று சொல்லுமளவிற்கு நடித்திருக்கிறார்.

எனது குருவிற்கு எதையாவது செய்ய வேண்டும் என்று நீண்ட நாளாக யோசித்து வந்தேன். அதை இப்படி செய்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு யாரும் படத்தில் மிஸ்டேக்ஸ் இருக்கிறது என்று சொல்லக் கூடாது என்பதற்காகவே படத்தின் விளம்பரங்களில் 'எ பிலிம் வித் மிஸ்டேக்ஸ்' என டேக்லைன் சேர்த்துள்ளேன்,” என்றார் பார்த்திபன்.

இப்படம் டிசம்பர் மாதம் 23ம் தேதியன்று வெளியாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in