ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
பாலிவுட்டின் ஸ்டைல் மற்றும் ஹேண்ட்சம் ஹீரோவான ஜான் ஆபிரஹாம், டிஸ்யும் படத்தின் வெற்றிக்கு பிறகு நடித்துள்ள படம் போர்ஸ் 2. போர்ஸ் படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகவுள்ள இப்படம் பற்றியும், இதில் நடித்த அனுபவம் பற்றியும் ஜான் ஆபிரஹாம் நமக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ...
போர்ஸ் 2 படம் போர்ஸ் படத்திலிருந்து எந்தளவுக்கு மாறுபட்டது.?
உண்மை தான். இரண்டு படமும் முற்றிலும் மாறுப்பட்டவை. இரண்டு படத்திற்கும் இடையே உள்ள ஒரே ஒரு ஒற்றுமை எனது கேரக்டர் தான். முதல்பாகத்தில் நான் எனது மனைவி, நண்பர்களை இழந்துவிடுவேன். அதன்பின்னர் எனது கேரக்டர் இன்னும் வலுவாக மாறிவிடுகிறது. போர்ஸ் 2 படம் ஐந்தாண்டுகளுக்கு பிறகு நடக்கும் சம்பவத்தை மையப்படுத்தியது. மேலும் இந்தப்படம் ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகி உள்ளது.
படத்தில் உங்க கேரக்டர் பற்றி சொல்லுங்க.?
ஏசிபி ஹர்சவர்த்தன் கேரக்டரில் நான் நடிக்கிறேன். மிகவும் நேர்மையான அதிகாரி. நாடும், நாட்டும் மக்களும் தான் அவருக்கு முக்கியம். நாட்டுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய ஒரு தைரியமான கேரக்டர். அதனால் வரும் எதிர்ப்புகளை பற்றி துளியும் கவலைப்படாத ஒரு அதிகாரி என்னுடைய ரோல். நிஜவாழ்க்கையிலும் அப்படி இருக்கத்தான் நான் ஆசைப்படுகிறேன்.
போர்ஸ்-2 படத்தில் ஆக்ஷ்ன் காட்சிகள் பற்றி சொல்லுங்க.?
மற்ற ஆக்ஷ்ன் படங்களில் இருந்து போர்ஸ்-2 படம் முற்றிலும் வித்தியாசமானது. படத்தில் ஆக்ஷ்ன் காட்சிகளே முற்றிலும் ஹை லெவலில் இருக்கும். படத்தில் நல்ல கதை உள்ளது, அதைவிட ஆக்ஷ்ன் காட்சிகள் தான் படத்திற்கு போனஸாக அமையும். போர்ஸ் 2 படத்தை பற்றி ஒருவரியில் சொல்ல வேண்டும் என்றால் இது ஒரு பக்கா ஆக்ஷ்ன் படம்.
ஆக்ஷ்ன் பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன.?
போர்ஸ்-2 படத்தின் ஆக்ஷ்ன் காட்சிகளின் சிறப்பு எல்லாம் இயக்குநர் மற்றும் ஸ்டண்ட் இயக்குநர்களையே சேரும். இந்தப்படத்தில் மொத்தம் 3பேர் ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றியிருக்கிறார்கள். இவர்களில் இரண்டு பேர் சர்வதேச ஸ்டண்ட் மாஸ்டர்கள். ஒருவர் பிரான்ஸை சேர்ந்தவர், மற்றொருவர் தென் ஆப்ரிக்காவை சேர்ந்தவர்.
படத்தில் நீங்கள் கஷ்டமாக உணர்ந்தது எது.?
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஆக்ஷ்ன் காட்சியை விட நடனமாடத்தான் மிகவும் கஷ்டப்பட்டேன். என்னை பொறுத்தவரை நடனம் எனக்கு ஆபத்தானது. நடனமாட எனக்கு பிடிக்கும், ஆனால் நான் சிறந்த டான்சர் கிடையாது. படப்பிடிப்பின் போது சில சமயங்களில் காயம் ஏற்பட்டது, அப்போது நடன காட்சிகளில் நடன உதவியாளர்கள் தான் உதவினர்.
இவ்வாறு ஜான் ஆபிரஹாம் கூறினார்.