Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

காட்பாதர்' படத்தின் 25ஆம் வருட கொண்டாட்டத்தில் சித்திக்-லால்..!

17 நவ, 2016 - 16:03 IST
எழுத்தின் அளவு:
godfather-movie-is-in-25th-year-of-celebration

1991ல் மலையாளத்தில் வெளியான படம் 'காட்பாதர்'.. முகேஷ், கனகா, திலகன் மற்றும் பலர் நடித்திருந்த இந்தப்படத்தை பிரபல இரட்டை இயக்குனர்களான சித்திக்-லால் இருவரும் இணைந்து இயக்கியிருந்தார்கள்.. கூட்டணியாக படம் இயக்க ஆரம்பித்தபின் இவர்கள் இயக்கிய மூன்றாவது படம் இது.. முகேஷ் தான் ஹீரோ என்றாலும் இந்தப்படத்தில் காட்பாதர் கேரக்டரில் பெரியவராக நடித்திருந்த என்.என்.பிள்ளை என்பவர் ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் தனது சிறப்பான நடிப்பால் கவர்ந்தார்..


சுமார் 417 நாட்கள் ஓடி சாதனை படைத்த இந்தப்படம் வெளியாகி தற்போது 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள சித்திக்-லால் இருவரும் இந்த சில்வர் ஜூபிளி சாதனை சந்தோஷத்தை கொண்டாட முடிவுசெய்தனர்.. தற்போது ஜெயசூர்யா நடித்துவரும் 'பக்ரி' என்கிற படத்தை இயக்கிவரும் சித்திக், அதன் படப்பிடிப்பு தளத்திலேயே 'காட்பாதர்' என்கிற பெயர் பொறித்த ஸ்பெஷலான கேக்கை வெட்டி கொண்டாடியுள்ளார்.. இந்தப்படத்தில் நடிக்கும் தனது நண்பன் லாலுக்கு முதல் கேக்கை ஊட்டினார் சித்திக். படக்குழுவினர் மொத்தமும் இந்த இரட்டை இயக்குனர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in