'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
கோடீஸ்வரி, ஜாக்பாட் நிகழ்ச்சிகள் மூலம் சின்னத்திரையிலும் பிரபலமான நடிகை குஷ்பு, பின்னர் மருமகள், ஜனனி, குங்குமம், கல்கி, ருத்ரா, பாசமலர் போன்ற சீரியல்களிலும் நடித்தார். இந்நிலையில், தற்போது நந்தினி என்ற பெயரில் ஒரு சரித்திர தொடரை அவர் பிரமாண்டமாக தயாரித்து வருகிறார். அந்த தொடரை திரைப்பட இயக்குனர்கள் செல்வா-ராஜ்கபூர் ஆகிய இருவரும் இயக்கி வருகின்றனர்.
மேலும், அடுத்த மாதம் ஒளிபரப்பாக உள்ள இந்த நந்தினி தொடரில், மாளவிகா என்றொரு மலையாள நடிகை நந்தினி என்ற லீடு ரோலில் நடித்து வருகிறார். இவர் மலையாளத்தில் பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர். அவர் மட்டுமின்றி இன்னும் சில மலையாள நடிகர் நடிகைகளும் இந்த சீரியலில் நடிக்கிறார்கள். தமிழில் சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் பார்த்த முகங்கள் அதிகமாக இருக்கக்கூடாது என்பதற்காக கேரள கலைஞர்களை தனது சீரியலுக்கு இறக்குமதி செய்திருக்கிறாராம் குஷ்பு.