ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'எத்தனை புதுமுகங்கள் வந்தாலும், எனக்கான வாய்ப்பு கிடைத்தே தீரும்; அதை யாரும் தடுக்க முடியாது' என, ஆவேசமாக கூறுகிறார் ஸ்ரீதிவ்யா. கீர்த்தி சுரேஷ், மஞ்சிமா மோகன், அனுபமா போன்ற நடிகையரின் வரவுக்கு பின், ஸ்ரீதிவ்யாவுக்கு வாய்ப்புகள் குறைந்ததே, அவரது இந்த ஆவேசத்துக்கு காரணம். சமீபத்தில், அவர் நடிப்பில் வெளியான காஷ்மோராவும், அவருக்கு பாராட்டை பெற்றுத்தரவில்லை. தற்போது, ஜீவாவுடன் சங்கிலி புங்கிலி கதவை தொற என்ற படமும், விஷ்ணு விஷாலுடன் மாவீரன் கிட்டு என்ற படமும் மட்டுமே, அவரது கைவசம் உள்ளன. இதனால், தெலுங்கு, கன்னட மொழிகளில் வலை வீச தயாராகி வருகிறார் ஸ்ரீதிவ்யா.