ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை படத்தில் விக்னேஷ்-ரமேஷ் என்ற சிறு வர்கள் முக்கிய வேடங்களில் நடித்தனர். இவர்களில் பெரிய காக்கா முட்டையாக நடித்த விக்னேஷ் அதன்பிறகு சமுத்திரகனி இயக்கிய அப்பா படத்தில் அவரது மகன் வேடத்தில் நடித்தார். முதல் படத்தைப்போலவே கவனிக்கப்படும் வேடத்தில் நடித்த விக்னேஷ் தற்போது மேலும் சில படங்களில் கமிட்டாகியிருக்கிறார்.
இந்த நிலையில், சின்ன காக்கா முட்டையான ரமேசும் தற்போது டெய்லி பேப்பர் என்றொரு படத்தில் நடித்து வருகிறார். வீடுகளுக்கு பேப்பர் போடும் சிறுவனின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சினை அடிப்படையில் இந்த படம் உருவாகிறது. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், இரண்டாவதுகட்ட படப்பிடிப்புக்கு தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். முதல் படத்தைப்போலவே இந்த படத்திலும் லீடு ரோலில் நடிக்கும் ரமேஷ், காக்கா முட்டையை விட இந்த படத்தில் இன்னும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறாராம்.