இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
2016ம் ஆண்டுக்கான 11வது ஆசியா விஷன் திரைப்பட விருது வழங்கும் விழா வருகிற 18ந் தேதி ஷார்ஜாவில் நடக்கிறது. இதில் தமிழ் படங்களின் பிரிவில் விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை படம் 5 விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த நடிகருக்கான விருது விஜய் சேதுபதிக்கும், நடிகைக்கான விருது தமன்னாவுக்கும், இயக்குனருக்கான விருது சீனு ராமசாமிக்கும், ஒளிப்பதிவாளருக்கான விருது ஷாஜிக்கும், சிறந்த படமாக தர்மதுரை படமும் தேர்வாகியிருக்கிறது.
இதுதவிர கபாலி படத்தில் நடித்த ராதிகா ஆப்தேவுக்கு சிறப்பு விருது வழங்கப்டுகிறது. தாரை தப்பட்டை படத்தில் நடித்த ஆர்.கே.சுரேஷ் சிறந்த வில்லனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சித் ஸ்ரீராம் சிறந்த பாடகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விருது பெற்ற அனைவரும் நாளை மறுநாள் சார்ஜா புறப்பட்டுச் செல்கிறார்கள்.