ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நாகசைதன்யா, சமந்தா இருவருக்கும் திருமணம் முடியும் வரை அவர்களது திருமணத்தைப் பற்றிய செய்திகள் வந்து கொண்டுதானிருக்கும். ஆண்டாண்டு காலமாய் நட்சத்திரங்களுக்கு இடையிலான காதலும், திருமணங்களும் செய்திகளாய் மாறுவதை தவிர்க்கவே முடியாது. சமந்தா, நாக சைதன்யா ஜோடியுடையது மட்டும்தான் சமீப காலமாக இருக்கும் ஒரே காதல் கதை. அவர்களுக்கு சீக்கிரமே திருமணம் செய்து வைத்துவிடலாம் என மீடியாவாசிகள் முடிவு செய்து பக்கம் பக்கமாக அவர்களது காதலைப் பற்றி எழுதினாலும் அவர்கள் அதை கண்டும் காணாமலும்தான் இருந்து வருகிறார்கள்.
இப்போது அந்த காதல் ஜோடியின் திருமணம் பற்றிய புதிய தகவல் ஒன்று டோலிவுட்டில் பரவி வருகிறது. அதன்படி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாம். முதலில் இந்து முறைப்படியும் அதற்கடுத்து கிறிஸ்துவ முறைப்படியும் திருமணம் செய்து கொள்ள காதல் ஜோடி முடிவெடுத்திருக்கிறார்களாம். சமந்தா கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர், அவரது பெற்றோர் அந்த முறையிலும் திருமணம் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களாம். அதனால்தான் இரு மத முறைப்படியும் திருமணம் நடக்க உள்ளதாம்.
நாக சைதன்யாவின் தம்பி அகிலின் திருமணம் அடுத்த ஆண்டு மே மாதம் நடக்க உள்ளது. ஒரே ஆண்டில் தன் மகன்களின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தி முடிக்க நாகார்ஜுனா இப்போதே தயாராகி வருகிறார் என்கிறார்கள்.