Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கபாலி' இரண்டாம் பாகத்தில் யார் ? யார் ?

14 நவ, 2016 - 13:08 IST
எழுத்தின் அளவு:
cast-on-the-movie-of-kabali-2-is-out-now

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'கபாலி' திரைப்படம் இந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்தது. சமூக வலைத்தளங்கள், யு டியூப், கூகுள் தேடல் என 'கபாலி' படம் பல விதங்களிலும் சாதனை புரிந்தது. தமிழ்த் திரையுலகத்திலேயே அதிக வசூலைப் பெற்ற படம் என்ற பெருமையையும் பெற்றது.


'அட்டகத்தி, மெட்ராஸ்' என்ற இரண்டு படங்களை மட்டுமே இயக்கிய பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த்தா என 'கபாலி' படம் ஆரம்பிப்பதற்கு முன்பு திரையுலகத்தில் உள்ள பலரும் ஆச்சரியப்பட்டனர். இருந்தாலும் திட்டமிட்டபடி படத்தின் தயாரிப்பாளர் தாணுவே வியக்கும் அளவிற்கு படத்தை முடித்துக் கொடுத்தார் இயக்குனர் பா.ரஞ்சித். ரஜினிகாந்த் மனதிலும் தனி இடத்தைப் பிடித்தார். 'கபாலி' படமும் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.


மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்தை தனுஷின் சொந்த நிறுவனமான உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கப் போவதாக ஆகஸ்ட் மாதமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனிடையே 'கபாலி 2' என்ற தலைப்பை தயாரிப்பாளர் தாணு புதிதாகப் பதிவு செய்துள்ளார். இது ரஜினி ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


'கபாலி 2' படம் வருமா, அது பா.ரஞ்சித் இயக்க உள்ள அடுத்த படமா, அல்லது அந்தத் தலைப்பில் வேறு யாராவது படத்தை இயக்கப் போகிறார்களா என்றும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். தனுஷ் அடுத்து நடிக்கப் போகும் 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தையும் தாணுதான் தயாரிக்க உள்ளார். இந்தப் படத்தை ரஜினியின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ளார். இந்தப் படத்தை தனுஷின் உண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும் சேர்ந்து தயாரிக்கிறது.


ஒரு வேளை 'கபாலி 2' படத்தை தயாரிப்பாளர் தாணுவும், தனுஷும் சேர்ந்து தயாரிக்கவும் வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது. தயாரிப்பாளர் தாணுவைப் பொறுத்தவரையில் அவர் ரஜினிகாந்த் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே செய்து கொடுப்பார். 'கபாலி' படத்தின் இரண்டாம் பாகம் என்பதும் ரஜினிகாந்தின் அனுமதியோடுதான் தலைப்புப் பதிவு செய்யப்பட்டிருக்கும் என்கிறார்கள். 'கபாலி' படத்தின் கிளைமாக்சிலேயே என்ன நடந்தது என்று தெரியாத அளவிற்கு வெறும் இருட்டில் துப்பாக்கிச் சத்தத்துடன் படத்தை முடித்திருப்பார்கள். அப்போதே படத்தின் இரண்டாம் பாகம் வரும் என்பதைச் சொல்லாமல் சொல்லி முடித்திருக்கிறார்கள்.


எனவே, விரைவில் 'கபாலி 2' படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும், அதில் முதல் பாகத்தில் இருப்பவர்களும் இருப்பார்களா என்பதும் தெரிய வரும்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in