'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல பின்னணி பாடகர் ஸ்ரீநிவாசின் மகள் சரண்யா. இவரும் பாடகிதான். இவர் பாடி வெளிவந்துள்ள நீயே என்ற சிங்கிள் டிராக் இசை ஆல்பம் இணைய தளத்தில் ஹிட் அடித்துள்ளது. சரண்யாவின் இனிய குரல் மட்டுமல்ல ஷ்ரேயே தேஷ்பாண்டேவின் காண்டம்பரரி நடனமும் ஆல்பத்தில் பிரமாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மோதலில் ஆரம்பிக்கும் ஆண் பெண் உறவு காதலில் முடியும் வகையில் இந்த ஆல்பம் உருவாக்கப்பட்டுள்ளது. பாடலை அறிவு எழுதி உள்ளார், ஃபன்னி கல்யாண் இசை அமைத்துள்ளார். இவர் ஏ.ஆர்.ரகுமான் இசைப் பள்ளியில் இசை கற்றவர். 5 நிமிட நேரம் ஓடும் இந்த ஆல்பத்தை கோமத்தேஷ் உபாதே இயக்கி உள்ளார். தெலுங்கு மற்றும் கன்னட மொழியிலும் இந்த ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது. ஒரே வாரத்தில் ஒரு லட்சம் பேர் இந்த பாடலை கேட்டும், பார்த்தும் உள்ளனர்.