தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்த முதல் படம் துப்பாக்கி. 2012ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ராணுவ வீரராக நடித்திருந்தார் விஜய். அவருக்கு ஜோடியாக காஜல்அகர்வால் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதையடுத்து முருகசுதாசுடன் விஜய் இணைந்த கத்தி படமும் ஹிட்டானது. இந்த நிலையில், நேற்று நவம்பர் 13-ந்தேதி துப்பாக்கி படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் முடிவடைந்ததையொட்டி விஜய் ரசிகர்கள் இணையதளங்களில் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு வந்தனர்.
ஆனால், இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ், துப்பாக்கி-2 படத்தை எடுக்குமாறு அவரிடம் கேட்டுக்கொள்ள, அதற்கு ஏ.ஆர்.முஆருகதாசும் கண்டிப்பாக எடுப்பேன் என்று கூறியுள்ளார். இது விஜய் ரசிகர்களை மிகப்பெரிய உற்சாகமடைய வைத்துள்ளது. அதனால் துப்பாக்கி படத்தின் போட்டோக்களை வைத்து துப்பாக்கி-2 போஸ்டர்களை இணையதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். ஆக, தற்போது மகேஷ்பாபு நடிக்கும் படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கி வரும் ஏ.ஆர்.முருகதாஸ் அந்த படத்தை முடித்ததும் விஜய்யுடன் துப்பாக்கி-2வில் இணைவார் என்று தெரிகிறது.