விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
எதிர்நீச்சல், மான்கராத்தே, கத்தி, ஆம்பள போன்ற படங்களில் காமெடியனாக நடித்து பிரபலமானவர் சதீஷ். அதற்கடுத்தபடியாக தேவி, ரெமோ படங்களுக்குப் பிறகு தற்போது விஜய்யுடன் பைரவா, லாரன்சின் மொட்ட சிவா கெட்ட சிவா படங்களிலும் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் நடித்து வந்த சதீஷ், தற்போது விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய சேதுபதி என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருவதால், தொடர்ந்து அந்த மாதிரி படங்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறார்.
குறிப்பாக, பிரபலமில்லாத நடிகர்களின் படங்கள் தேடி வந்தால், அந்த படங்களை அவர் உடனடியாக ஏற்பதில்லை. தன்னிடம் பேசிக்கொண்டிருக்கும் முன்னணி நடிகர்களின் படங்கள் எப்போது தொடங்குகிறது. எத்தனை நாட்கள் கால்சீட் வேண்டும் என்பதை தெளிவாக கேட்டறிந்த பிறகு, கால்சீட் இருந்தால் மட்டுமே அந்த படங்களை ஓகே சொல்கிறார். இதற்கெல்லாம் மேலாக, இந்த படத்தில் நடித்து வரும்போது பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்க திடீரென்று எனக்கு அழைப்பு வந்தால், நான் போய் விடுவேன். அந்த படத்தை முடித்துக் கொடுத்த பிறகுதான் உங்கள் படத்திற்கு வருவேன் என்றும் கண்டிசன் போட்டு நடிக்கிறார் சதீஷ்.