தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிவகார்த்திகேயன், அனிருத் இருவரையும் வளர்த்துவிட்டவர் தனுஷ்தான். அவர்கள் உச்சத்துக்கு சென்றதும், தனுஷை மதிக்காமல் அவருக்கு எதிராக ஒரு அணியையே அமைத்துவிட்டனர்.
சிவகார்த்திகேயன், அனிருத் இருவரும் நன்றி மறந்துவிட்டதால் இனி யாரையும் வளர்த்துவிடக்கூடாது என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் தனுஷ். இந்நிலையில் மெட்ராஸ் படத்தில் நடித்த கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ள காலக்கூத்து படத்தின் டீசரை சில தினங்களுக்கு முன் நடிகர் தனுஷ் வெளியிட்டிருக்கிறார்.
அதே தினத்தில் கலையரசன் கதாநாயகியாகனாக நடித்துள்ள 'பட்டினப்பாக்கம்' படத்தின் டீஸரை 10-11-16 அன்று இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டார். பா.ரஞ்சித் இயக்கிய 'மெட்ராஸ்' மற்றும் ரஜினியின் 'கபாலி' படங்களில் கலையரசன் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தார். அந்தவகையில்தான் பட்டினப்பாக்கம் டீசரை பா.ரஞ்சித் வெளியிட்டார்.
அது மட்டுமல்ல, பா.ரஞ்சித்தின் சிபாரிசின் பேரிலேயே கலையரசன் நடித்த 'காலக்கூத்து' படத்தின் டீசரை வெளியிட சம்மதித்தாராம் தனுஷ். கலையரசன் பற்றி பா.ரஞ்சித் சொன்ன விஷயங்களின் அடிப்படையில் விரைவில் அவரை வைத்து தனுஷ் படம் தயாரித்தாலும் ஆச்சர்யமில்லை.