Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: ஆண்டுக்கு 15 படங்களுக்கு மேல் நடித்து ஹாட்ரிக் அடித்த கமல்

12 நவ, 2016 - 11:00 IST
எழுத்தின் அளவு:
Kamal-do-15-film-hatric-years

இந்த ஆண்டு கமல் நடித்த எந்த படமும் வெளிவரவில்லை. மீன் குழம்பும் மண் பானையும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் ஆண்டுக்கு ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். கமல் மட்டுமல்ல எல்லா முன்னணி நடிகர்களாலும் ஒன்றிரண்டு படங்களில் மட்டும்தான் இப்போது நடிக்க முடிகிறது. காரணம் ஒரு படத்துக்கு குறைந்தது 6 மாதவமாவது எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் கமல்ஹாசன் 1976, 1977, 1978 ஆகிய மூன்று ஆண்டுகளும் தொடர்ச்சியாக ஆண்டுக்கு 15 படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்துள்ளார்.


1976ம் ஆண்டு மன்மதலீலை, சத்யம், ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது, உணர்ச்சிகள், குமார விஜயம், இதய மலர், மூன்று முடிச்சு, மோகம் முப்பது வருஷம், லலிதா என 9 தமிழ் படங்களிலும், அபூப்பன், அக்னி புஷ்பம், சமாசியே, ஸ்விம்மிங் பூல், அருது, குட்டுவும் சிக்ஷியும், பொன்னி, நீ எண்ட லஹரி என 8 மலையாளப் படங்களிலும், அந்துலேனி கதா (சிறப்பு தோற்றம்) என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.


1977ம் ஆண்டு உயர்ந்தவர்கள், அவர்கள், உன்னை சுற்றும் உலகம், 16 வயதினிலே, ஆடு புலி ஆட்டம், நாம் பிறந்த மண் என 6 தமிழ் படங்களிலும், சிவ தாண்டவம், ஆசீர்வாதம், மதுரஸ்வப்பனம், ஸ்ரீதேவி, அஷ்தமாங்கல்யம், நிறகுடம், ஓர்மகள் மறக்குமோ, ஆனந்தமும் பரமானந்தமும், சத்யவான் சாவித்ரி, ஆத்ய பாடம் என 10 மலையாளப் படங்களிலும், கோகிலா என்ற கன்னட படத்திலும், கபிதா என்ற பெங்காலி படத்திலும் நடித்துள்ளார்.


1978ம் ஆண்டு நிழல் நிஜமாகிறது, சக்க போடு போடுராஜா, இளமை ஊஞ்சலாடுகிறது, சட்டம் என் கையில், அவள் அப்படித்தான், சிகப்பு ரோஜாக்கள், மனிதரில் இத்தனை நிறங்களா என 7 தமிழ் படங்களிலும், மதனோட்சவம், காத்திருந்த நிமிஷம், அவள் விஸ்வத்தராயிருந்து (சிறப்பு தோற்றம்), அனு மோதனம், படகுதிர, வயநாடன் தம்பன், என 6 மலையாள படங்களிலும் நடித்திருந்தார். தப்பு தாளங்கள் தமிழ் படத்திலும் யாத்ரா மலையாள படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். வயசு பில்ச்சண்டி, மரோசரித்ரா என்ற 2 தெலுங்கு படங்களில் நடித்திருந்தார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in