Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அனுஷ்காவுக்கு அடுத்த ஆண்டு திருமணம் ?

11 நவ, 2016 - 12:56 IST
எழுத்தின் அளவு:
anushkas-marrige-is-next-year

திரையுலகத்தைப் பொறுத்தவரையில் ஒரு ஹீரோவுக்கு எப்போது திருமணம் என யாருமே கேட்க மாட்டார்கள். ஆனால், ஒரு ஹீரோயின் முப்பது வயதை நெருங்குகிறார் என்றால் அவருக்கு எப்போது திருமணம் என ஒவ்வொருவரும் பேச ஆரம்பித்துவிடுவார்கள். அப்படியும் இல்லையென்றால் அவருக்கு இவருடன் காதல் என கிசுகிசுவையும் வெளியிடுவார்கள். அவற்றிலிருந்து இதுவரை எந்த ஒரு ஹீரோயினும் தப்பியதில்லை. கிசுகிசு என்று சொன்னாலும் அவை பின்னர் உண்மையாகவே நடந்த சம்பவங்களும் உண்டு.


தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா ஆகியோருடைய திருமணம் எப்போது என்று எழுதி எழுதி பலரும் ஓய்ந்து போய்விட்டார்கள். மூவருக்குமே வயது முப்பதைத் தாண்டிவிட்டது. அவர்களில் நடிக்க வந்ததில் அனுஷ்கா ஜுனியராக இருந்தாலும் வயதில் த்ரிஷா, நயன்தாராவை விட மூத்தவர். சில நாட்களுக்கு முன்னர்தான் தன்னுடைய 36வது பிறந்தநாளைக் கொண்டாடினார் அனுஷ்கா.


த்ரிஷாவின் திருமணம் நிச்சயதார்த்தம் வரை சென்று நின்றுவிட்டது. இப்போதைக்கு தன் திருமணம் இல்லை என த்ரிஷா அறிவித்துவிட்டார். அவருக்குத் தொடர்ந்து நாயகியாகவே நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் என அனைவருமே எழுதி முடித்துவிட்டார்கள். தங்களது திருமணம் எப்போது என அவர்கள்தான் அறிவிக்க வேண்டும்.


அனுஷ்காவிற்கு அடுத்த ஆண்டில் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என அவரது பெற்றோர்கள் முடிவெடுத்துவிட்டார்களாம். இதற்காக அவர்கள் சில பூஜைகளைக் கூட நடத்தி முடித்துள்ளார்களாம். அனுஷ்கா கைவசமும் தற்போது புதிய படங்கள் இல்லை. ஏற்கெனவே நடிக்க சம்மதித்த படங்கள்தான் உள்ளன. அதனால், 2017ல் அனுஷ்கா திருமணம் செய்து கொள்வார் என டோலிவுட்டில் மீண்டும் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in