பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
தமிழில் அறிமுகமான டார்லிங் படத்தில் அதிரடி பேயாக நடித்தவர் நிக்கி கல்ராணி. பின்னர் யாகவராயினும் நாகாக்க, கோ-2, வேலையின்னு வந்தா வெள் ளைக்காரன் என சில படங்களில் நடித்தவர், இப்போது ஒரே நேரத்தில் ஐந்து படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் பிசியான நடிகையாகியிருக்கிறார் நிக்கி கல்ராணி. அதோடு தற்போது நடித்து வரும் மொட்டை சிவா கெட்ட சிவா, நெருப்புடா, கடவுள் இருக்கான் குமாரு ஆகிய படங்களில் அடாவடித்தனம் செய்யும் அதிரடியான கேரக்டர்களில நடித்திருக்கிறார்.
மேலும், இதுபற்றி அவர் கூறுகையில், நிஜத்திலும் நான் துறுதுறுவான பெண்தான். எப்போதுமே எதையாவது செய்து கொண்டேயிருப்பேன். அதுவும் இல்லையென்றால் யாராது தென்பட்டால் அவர்களிடம் கடகடவென்று பேசிடிக்கொண்டேயிருப்பேன். இதுதான் என் சுபாவம். அப்படிப்பட்ட என் ரியல் கேரக்டரைப்போலவே இந்த படங்களில் கேரக்டர்கள் கிடைத்திருப்பதால், கதைக்காக எந்த மாற்றமும் செய்யாமல் எனது நிஜ கேரக்டரையே வெளிப்படுத்தி நடித்திருக்கிறேன். முக்கியமாக இதுவரை நான் நடித்த படங்களை விட இந்த படங்களில் பர்பாமென்ஸ் மட்டுமின்றி கவர்ச்சியில் கலக்கியிருக்கிறேன். அதனால் இந்த படங்கள் திரைக்கு வரும்போது எல்லோருக்கும் பிடித்தமான நடிகையாகி விடுவேன் என்கிறார் நிக்கி கல்ராணி.