பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
றெக்க படத்தில் புசுபுசுவென்று உடல் பெருத்திருந்த லட்சுமிமேனனை அதை காரணம் காட்டியே சில டைரக்டர்கள் புறக்கணித்து விட்டனர். மாறாக, அவர் நடிக்கயிருந்த படங்கள் மடோனா, மஞ்சிமா மோகன் போன்ற கேரளத்து நடி கைகள் பக்கம் திரும்பி நிற்கிறது. ஆனால் இவர்களது சம்பளம் லட்சுமிமேனனை விட குறைவு என்பதோடு, வேகமாக வளர்ந்து வரும் நடிகைகள் என்பதும் இதற்கு இன்னொரு காரணம் என்றும் சொல்கிறார்கள்.
இந்நிலையில், வெயிட் போட்டதால்தான் தனக்கான படங்கள் மற்ற நடிகைகள் பக்கம் திரும்பி விட்டன என்று செய்திகள் வெளியாகி வந்தபோதும் கலங்க வில்லை லட்சுமிமேனன். சில டைரக்டர்களை தொடர்பு கொண்டு படவேட்டை நடத்திக்கொண்டிருக்கிறார். அதோடு, நடிக்க வாய்ப்பிருந்தால் அஜீத்தின் வேதாளம் படத்தைப்போன்று தங்கை வேடமாக இருந்தால்கூட நடிப்பேன். முக்கியமாக நடிகை என்கிற இமேஜில் இருந்து விடுபட்டு ஒரு சாதாரண பெண்ணாக என்னை வெளிப்படுத்தவே ஆசைப்படுகிறேன். இதுவரை நான் நடித்த படங்க ளிலும் அந்த மாதிரிதான் என்னை இயக்குனர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதனால் வெயிட் போட்டது எந்த வகையிலும் என்னை பாதிக்காது. எனக்கான கதாபாத்திரங்கள் வரும்போது கண்டிப்பாக டைரக்டர்கள் என்னை அழைப்பார்கள் என்று தனது கோலிவுட் அபிமானிகளிடம் நம்பிக்கையுடன் பேசியுள்ளார் லட்சுமிமேனன்.