டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
எப்போதாவது நல்ல கேரக்டர் வருகிறதா, அதில் தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் சம்மதம் இருக்கிறதா என்றால் மட்டுமே அந்தப்படங்களில் நடிக்க ஒப்புக்கொள்கிறார் நடிகை சினேகா. ஒரு சில நடிகைகளைப்போல சினிமாவில் நடித்தே ஆகவேண்டும் என்பதற்காக வாழ்க்கையை விவாகரத்து வரை கொண்டுசெல்லும் எண்ணமெல்லாம் சினேகாவிடம் இல்லவே இல்லை. ஹரிதாஸ் மற்றும் உன் சமையலறையில் ஆகிய படங்கள் சினேகா அப்படி நடித்தவைதான். இப்போது ஒரு நீண்ட இடைவெளிக்குப்பிறகு மம்முட்டிக்கு ஜோடியாக 'தி கிரேட் பாதர்' என்கிற மலையாள படம் ஒன்றிலும் நடித்து வருகிறார் சினேகா என்பதை ஏற்கனவே சொல்லியிருக்கிறோம்.
இந்தப்படத்தை பிருத்விராஜ் தயாரிக்க, ஹனீப் அதேனி என்பவர் இயக்கியுள்ளார். இந்தநிலையில் சத்தமே இல்லாமல் இன்னொரு மலையாளப்படத்திலும் நடித்து முடித்துவிட்டார் சினேகா. மலையாள இளம் நடிகர் தயன் சீனிவாசன் நடித்துள்ள 'ஒரேமுகம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் சினேகா. க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப்படத்தில் இவர் தவிர சீனியர் நடிகை அபிராமியும் முக்கியமான கேரக்டர் ஒன்றில் நடித்துள்ளார். நாளை வெளியாக இருந்த இந்தப்படம், ரூபாய் நோட்டு பிரச்சனை காரணமாக வரும் நவ-18க்கு தள்ளிப்போயுள்ளது.