ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜெயம் ரவி அறிமுகமான ஜெயம் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் சதா. "போ...போ..." என தலையை சாய்த்து கையை கையை நீட்டி ஹீரோவை துரத்தும் அவரது அந்த ஸ்டைல் இப்போதும் பேமஸ். அதன் பிறகு ஒன்றிரண்டு சிறிய படங்களில் நடித்தவர். ஷங்கர் இயக்கிய அந்நியன் படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடித்து உச்சிக்குப்போனார். அதன் பிறகு பிரியசகி, திருப்பதி உள்பட பல படங்களில் நடித்தார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்தார். கடைசியாக இந்திப் படங்களிலும் நடித்தார். தமிழில் இவர் கடைசியாக நடித்த மதகஜராஜா படம் இன்னும் வெளிவரவில்லை.
இந்த நிலையில் சின்னத்திரை பக்கம் வந்திருக்கிறார் சதா. விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் ஜோடி நிகழ்ச்சியின் சீசனில் டி.ராஜேந்தரோடு இணைந்து மார்க் போடப்போகிறார். ஆம் நிகழ்ச்சியின் நடுவராக பணியாற்றுகிறார். இடையிடையே நடனமும் ஆடுவார். இந்த நிகழ்ச்சி வார இறுதி நாட்களில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.