Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வெயிட் போட்டதால் படவாய்ப்பை இழந்த இனியா!

10 நவ, 2016 - 09:38 IST
எழுத்தின் அளவு:
as-iniya-gained-weight-she-lost-her-movie-changes

வாகை சூடவா இனியா அதன்பிறகு பல படங்களில் நடித்தபோதும் அவரை பேச வைக்கும் அளவுக்கு கதாபாத்திரங்கள் அமையவில்லை. அதனால் அதன்காரணமாக கதாநாயகி வாய்ப்புகளை இழந்த அவர் கேரக்டர் நடிகையாக மாறிவிட்டார். எந்த மாதிரியான கேரக்டர் என்றாலும் ஓகே என்று சொல்லி தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். இதில் வடிவுடையான் இயக்கிவரும் பொட்டு படத்தில் நமீதாவுக்கு அகோரி வேடம் என்றால், இனியா ஒரு அதிரடியான நெகடீவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


குறைவான நேரமே படத்தில் வந்தாலும் இனியாவின் கேரக்டர் ரசிகர்களின் மனதில் அழுத்தமாக பதிந்து விடுமாம். அப்படியொரு கேரக்டராம். இந்த நிலையில் தமிழில் நடித்துக்கொண்டே தெலுங்கிலும் கால்பதித்து விட நினைத்த இனியா, ஐதராபாத்தில் முகாமிட்டு புதிய படங்களுக்காக கடினமான முயற்சியில் ஈடுபட்டிருந்தார். ஆனால் ஒரு புதுமுக நடிகருக்கு ஜோடியாக கமிட்டானபோதும், போட்டோ செஷனுக்குப்பிறகு அதிக உடல் பருமனாக இருப்பதாக சொல்லி இனியாவை நீக்கி விட்டனர்.


இதனால் தெலுங்கில் இந்த படம் மூலம் ஒரு இடத்தை பிடித்து விடலாம் என்று முயற்சி எடுத்த இனியா தற்போது கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனதால் அதிக வருத்தத்துடன் கேரளா சென்று விட்டார். ஆனால் தெலுங்கு படவாய்ப்பு நழுவிப்போனதற்கு உடல் வெயிட் போட்டதுதான் காரணம் என்பதால், இனிமேல் உடலை சரியாக பராமரிக்கவும் முடிவு செய்திருக்கிறாராம் இனியா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in