‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பரத் நடிப்பில் கடுகு, என்னோடு விளையாடு ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளன. இதில் கடுகு படத்தில் கிராமத்து பயில்வான் வேடத்தில் நடித் திருப்பவர், என்னோடு விளையாடு படத்தில் குதிரை ரேஸ் கதையில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் இன்னொரு ஹீரோவாக கிருமி கதிர் நடித்துள்ளார். இந்த படங்களைத் தொடர்ந்து பரத் நடித்திருக்கும் இன்னொரு படம் பொட்டு. ஸ்ரீகாந்த்-ராய்லட்சுமி நடித்த செளகார் பேட்டை என்ற ஹாரர் படத்தை இயக்கிய வடிவுடையான் இந்த படத்தை இயக்கி வருகிறார்.
மேலும், முந்தைய படத்தைப்போலவே இந்த படமும் ஹாரர் கதை பின்னணியில் உருவானபோதும், இதில் பூர்வஜென்மத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் வடிவுடையான். அதோடு, ஏற்கனவே வந்த கதைகளின் சாயல் இல்லாத வகையில் ஒரு புதுமையான பூர்வஜென்ம கதை அடிப்படையில் இந்த பொட்டு உருவாகி வருகிறதாம். முக்கியமாக பரத்தை மாறுபட்ட கோணத்தில் வெளிப் படுத்துகிறதாம் இந்த பொட்டு. அதோடு இந்த படத்தில் தம்பி ராமைய்யா, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சாமிநாதன் என பல காமெடியன்களும் இடம்பெற்றிருப்பதால் திரில்லர் கலந்த காமெடியில் இப்படம் உருவாகியிருப்பதாக சொல்கிறார்கள்.