Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛டுவிட்டரில்' கடைசியாக சேர்ந்த நபர் நானாக தான் இருப்பேன்: காஜல் அகர்வால்

10 நவ, 2016 - 03:12 IST
எழுத்தின் அளவு:
at-last-only-kajal-agarwal-joined-in-twitter

அழகான கண்களுக்கு சொந்தக்காரர்; மகதீரா, துப்பாக்கி போன்ற, நல்ல கதையம்சம் உள்ள படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பவர், காஜல் அகர்வால். அவர் நடிப்பில், கவலை வேண்டாம் படம், விரைவில் வெளிவர உள்ளது; இனி, காஜல் அகர்வால் பேசுவார்...


கவலை வேண்டாம் படம் பற்றி?


டி.கே.இயக்கத்தில், ஜீவா, நான் மற்றும் பாபி சிம்ஹா நடித்துள்ள படம் இது; காதலும், காமெடியும் கலந்த கதை. அம்மா, அப்பா, மகன், மகள் மற்றும் நட்பு என, உறவுகளை சொல்லும் படம். திவ்யா என்ற துறுதுறு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இந்த மாதிரி கதை உள்ள படத்தில் நடித்தது மகிழ்ச்சி. ஜீவா ஒரு ஜாலி ஹீரோ.


சவாலான கேரக்டர்களில் நடிக்காமல், வழக்கமான ஹீரோயின் கேரக்டர்களிலேயே நடிப்பது, சலிப்பாக இல்லையா?


நீங்கள் என்ன கேட்க வர்றீங்கன்னு எனக்கு புரிகிறது. அஜீத் சார் மற்றும் ராணாவுடன் நடிக்கும் படங்களில், ரொம்ப வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கிறேன். எனக்கே, இது போன்ற கேரக்டர்களில் நடிப்பது, புது அனுபவமாக இருந்தது. கண்டிப்பாக, இந்த படங்களில் வித்தியாசமான காஜலை பார்க்கலாம்.


பலரும் பேயா நடிக்கிறாங்களே; நீங்கள் எப்போது?


பக்கா ஆக் ஷன் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. கண்டிப்பாக, இது போன்ற ஒரு படத்தில் விரைவில் நடிப்பேன். மற்றபடி, பேய் கதைகள் எல்லாம், இதுவரை என்னை தேடி வரவில்லை; பேயை தேடி நாம் போவதை விட, பேய், நம்மை தேடி வரட்டுமே பார்க்கலாம்.


கதையை எப்படி தேர்வு செய்றீங்க?


முதலில், கதையை தான் பார்ப்பேன். அந்த கதையில், என் கேரக்டருக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் உள்ளது என்பதையும் பார்ப்பேன். அதன்பின், ஹீரோ யார், இயக்குனர் யார் என விசாரித்து, இறுதியாக படத்தை தேர்வு செய்வேன்.


விஜய் மற்றும் அஜீத் கூட நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவம்?


ஜில்லா மற்றும் துப்பாக்கியில், விஜய் கூட நடித்தேன். இப்போது, அஜீத் படத்தில் நடிக்கிறேன்; இருவருமே நிஜமான சூப்பர் ஸ்டார்கள். அவர்களின் சினிமா பயணத்தில், நானும் இணைந்து நடித்திருப்பது, இனிமையான அனுபவம்.


தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு என, மூன்று மொழிகளில், எப்பவும் பிசியாகவே இருக்கீங்க; எப்படி சமாளிக்கிறீங்க?


கொஞ்சம் கஷ்டம் தான். கடவுள் புண்ணியத்தில் அருமையான டீம் கிடைப்பதால் தான், மூன்று மொழிகளில் தொடர்ந்து நடிப்பது சாத்தியமாகிறது. மேனேஜர், உதவியாளர்கள் மற்றும் காஸ்ட்யூமர் என, ஒவ்வொருவருக்கும் என் வளர்ச்சியில் பங்கு உள்ளது.


'டுவிட்டர்' பயன்பாடு?


டுவிட்டரில், கடைசியா சேர்ந்த நபர் நானாகத் தான் இருப்பேன். மூன்று மாதங்களுக்கு முன் தான் இணைந்தேன். அதைப்பற்றி கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து கொண்டேன். என் ரசிகர்களிடம், என்னை பற்றிய விஷயங்கள் பகிர்ந்து கொள்ள, 'பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம்' இந்த மூன்றிலும், இப்போது தான் பயன்படுத்த துவங்கியிருக்கிறேன்.


தற்போது உங்கள் பட நிலவரம்?


அஜீத்துடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு, வெளிநாடுகளில் நடந்து முடிந்துள்ளது; மூன்றாவது ஷெட்யூல் சீக்கிரம் துவங்க உள்ளது. ராணா, சிரஞ்சீவியுடன் தெலுங்கில் நடிக்கும் படங்களின் ஷூட்டிங் போயிட்டிருக்கு. முதன்முறையாக, அரசியல் பின்னணியில் நான் நடிக்கும் படம் இது.


தீபாவளியை எப்படி கொண்டாடினீர்கள்?


தீபாவளிக்கு, மும்பையில் தான் இருந்தேன். தோழிகளுடன் சேர்ந்து, ஏ தில்கே முஷ்கில் படம் பார்த்தேன். குடும்பத்தினருடனும், தோழிகளுடனும் அன்றைய பொழுது கழிந்தது, மனதுக்கு சந்தோஷத்தை தந்தது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in