'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'தனி ஒருவன்' படம் தமிழில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அனைத்து ஊர்களிலும் அந்தப் படம் தனி வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தை தற்போது தெலுங்கில் ராம்சரண், ரகுல் ப்ரீத் சிங், அரவிந்த் சாமி மற்றும் பலர் நடிக்க 'துருவா' என்ற பெயரில் ரீமேக் செய்து முடித்திருக்கிறார்கள். படத்தின் இசையை நள்ளிரவு 12 மணி அளவில் வெளியிட்டார்கள்.
ஹிப்ஹாப் தமிழா தெலுங்கில் 'துருவா' படம் மூலம் அறிமுகமாகிறார். படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. பாடல்களை சந்திரபோஸ், யதகிரி ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். அமித் மிஷ்ரா, பத்மலதா, ஸ்னிக்கி, விஷ்ணுப்ரியா, நிகிதா காந்தி, ஹிப்ஹாப் தமிழா ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.
படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் ஃபிரஷ் ஆகவும், வித்தியாசமாகவும் இருப்பதாக தெலுங்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார்கள். தமிழைப் போலவே பாடல்களும், படமும் தெலுங்கிலும் பெரிய வரவேற்பை பெறும் என இசை வெளியீட்டிற்குப் பின்னர் இன்னும் பலர் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.