பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
2016ம் ஆண்டில் கமல் நடித்த எந்த படமும் வெளிவரவில்லை. விஸ்வரூபம் இரண்டாம் பாகம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளிவரவில்லை. இந்த ஆண்டு கமல் படம் ரிலீஸ் இல்லை என்ற குறையை போக்க வருகிறது மீன் குழம்பும் மண்பானையும் படம். இதில் கமல்ஹாசன் செட்டிநாட்டு குடும்பத்தின் மூத்த தலைக்கட்டாக கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.
சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த் தனது ஈஷான் புரொடக்ஷன் சார்பில் தயாரிக்கும் முதல் படம் மீன்குழம்பும் மண்பானையும். இதில் பிரபு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு இது 200வது படம். ஜெயராம் மகன் காளிதாஸ் ஹீரோ, ஆஷ்னா ஜவேரி ஹீரோயின். பூஜா குமார் பிரபு மனைவியாக நடிக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர் காமெடி வில்லன். அமுதேஸ்வர் இயக்கியுள்ளார். இமான் இசை அமைத்துள்ளார். ரிச்சர்ட் கெவின் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
காரைக்குடி பகுதியில் இருந்து மலேசியாவில் செட்டிலாகி அங்கு ஓட்டல் நடத்தும் ஒரு குடும்பத்தின் கதை. அந்த குடும்பத்தை சேர்ந்த காளிதாஸ் காதலில் சிக்கி அதன் மூலம் ஒரு பெரும் பிரச்சினையில் சிக்குகிறார். அதிலிருந்து அவர் எப்படி மீண்டார் என்பது கதை. அந்த குடும்பத்தின் மூத்த தலைமுறை தலைவராக கமல் கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார். 11ந் தேதி வெளிவருகிறது.