Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல்ஹாசனை கவுரவப்படுத்திய மதன் கார்க்கி

09 நவ, 2016 - 12:16 IST
எழுத்தின் அளவு:
Madhan-Karky-honoured-Kamal

பாடலாசிரியர் மதன் கார்க்கி டூப்பாடூ என்ற இசை யூ டியூப் சேனல் நடத்தி வருகிறார். கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி அவர் 1977ம் ஆண்டு நடித்த கோகிலா என்ற படத்தின் காட்சிகளுக்கு புதிய பாடல் ஒன்றை எழுதியுள்ளார் கார்க்கி. இதற்கு அணில் ஸ்ரீனிவாசன் இசை அமைத்துள்ளார். "காதல் நொடியே அசையாதே..." என்ற இந்த பாடலின் பின்னணியில் கோகிலா படத்தில் கமலும், ஷோபாவும் இணைந்து நடித்த காட்சிகள் இடம் பெறுகிறது.


"உலகநாயகன் கமல் ஹாசனிற்காக அர்ப்பணிக்கப்பட்ட பாடல் காதல் நொடியே. நாம் அனைவரும் கமல் சாரை பல அவதாரங்களில் பார்த்து இருக்கிறோம். ஆனால் அப்போது அவர் வைத்திருந்த சிகை அலங்காரம், அவர் அணிந்த உடைகள் மற்றும் அவருடைய கண்ணாடி ஆகியவற்றை இன்றளவும் யாராலும் மறக்க முடியாது. அதேபோல் பழம்பெரும் இயக்குநர் பாலுமகேந்திரா சாரையும் நாங்கள் நினைவுகூர விரும்பினோம். எனவே தான் அவருடைய முதல் இயக்கத்தில் உருவான கோகிலா படத்தை தேர்ந்தெடுத்தோம்.அந்த படத்தின் காட்சிகளை எங்களுக்கு வழங்கிய ஜி வி பிலிம்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் திரு வெங்கடேஷ் அவர்களுக்கு எங்களுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்." என்கிறார் டூப்பாடூ இசைத்தளத்தின் தலைவர் கௌந்தேயா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in