இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
ரஜினி, ஷங்கர் படங்களில் சமீபகாலமாக இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரகுமான், தற்போது அவர்கள் இணைந்துள்ள 2.ஓ படத்திற்கும் இசையமைக்கிறார். பெரும்பாலும், ஷங்கர் இயக்கும் படங்களென்றாலே பாடல்களில் அதிக ஆர்வம் காட்டும் ஏ.ஆர்.ரகுமான், இந்த படத்திற்காக 6 பாடல்களை வரை கம்போஸ் செய்துள்ளதாக முன்பு கூறப்பட்டது. ஆனால் இப்போது அப்படத்தில் ஒரேயொரு பாடல் மட்டும் இடம்பெறுவதாக கூறுகிறார்கள்.
மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு 2.ஓ படத்தில் ரஜினி, எமிஜாக்சன் பங்குபெறும் ஒரு டூயட் பாடலை கம்போஸ் செய்த ஏ.ஆர்.ரகுமான், அந்த பாடலை பிரிட்டீஷ் பாடகர் அர்ஜூன் குமாரராஜவை அழைத்து பின்னணி பாட வைத்துள்ளாராம். இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவர், ஹாலிவுட் பாணியில் தமிழை மிக வித்தியாசமான முறையில் உச்சரித்து பாடியிருப்பது அந்த ரொமான்ஸ் பாடலுக்கு புதுமை சேர்த்துள்ளதாம். இந்த பாடல்தான் 2.ஓ படத்தின் பப்ளிசிட்டிகளில் இடம்பெறப்போவதாக சொல்கிறார்கள்