தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சந்தானம் ஹீரோவாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்கள் தோல்வியடைந்தநிலையில், அவர் மூன்றாவதாக நடித்த தில்லுக்கு துட்டு படம் கமர்ஷியலாக வெற்றியடைந்தது. முதல் இரண்டு படங்களை தன்னை ஹீரோவாக நிலைநிறுத்திக் கொள்ள பயன்படுத்திக் கொண்ட சந்தானம், தனது மூன்றாவது படத்தில் வெற்றியை பெற்று தன்னை கதாநாயகனாக நிலைநிறுத்திக் கொண்டுவிட்டார்.
தற்போது 'சர்வர் சுந்தரம்' படத்திலும் நடித்து முடித்துவிட்ட சந்தானம் அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படம், விடிவி கணேஷ் தயாரிப்பில் 'சக்கப்போடு போடு ராஜா', வாசன் விஷுவல் வெஞ்சர்ஸ் தயாரிப்பில் 'ஓடி ஓடி உழைக்கணும்' போன்ற படங்களில் நடிக்க இருக்கிறார். சந்தானம் ஹீரோவாக நடித்த படங்களில் பாடல்கள் பெரிய அளவில் பேசப்படவில்லை.