நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் |
சத்யா மூவீஸ் தயாரிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், தேவா இசையமைப்பில், ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன் மற்றும் பலர் நடிக்க 1995-ம் ஆண்டு வெளியாகி தமிழ்த் திரையுலகில் மிகப் பெரும் சாதனை படைத்த திரைப்படம் பாட்ஷா. அந்தப் படத்திற்கு முன்பும் சரி, பின்பும் சரி ரஜினிகாந்த் நடித்து எத்தனையோ படங்கள் வெளிவந்தாலும் இன்றைய இளம் ரசிகர்களும் இப்போதும் ரசிக்கக் கூடிய ஒரு படமாக இருப்பது பாட்ஷா படத்திற்குக் கிடைத்த பெருமை.
சென்டிமென்ட், நகைச்சுவை, ஆக்ஷன், விறுவிறுப்பு, காதல் என அனைத்து அம்சங்களும் சரியான விகிதத்தில் கலந்து கொடுக்கப்பட்ட இந்தப் படம் போன்று இன்னுமொரு படம் எந்தக் காலத்திலும் வரப் போவதில்லை என ரஜினி ரசிகர்கள் இன்று வரை கொண்டாடி வரும் ஒரு படம்.
சமீபகாலமாக பழைய படங்களை டிஜிட்டல்படுத்தி மீண்டும் திரையிடுவது அதிகரித்து வருகிறது. அந்தவகையில் இதுவரை எம்ஜிஆர்., சிவாஜி படங்களே அதிகளவில் டிஜிட்டலில் வெளியான நிலையில் இப்போது ரஜினியின் பாட்ஷா படத்தை டிஜிட்டல்படுத்தி ரீ-ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். இதற்கான வேலையை சத்யா மூவிஸ் நிறுவனம் மேற்கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வருகிற டிசம்பர் 12-ம் தேதி ரஜினியின் 66வது பிறந்தநாள் வருகிறது. அந்தநாளில் பாட்ஷா-வின் டிஜிட்டல் வெர்ஷனை வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
அப்போ, இந்த வருடம் ரஜினி ரசிகர்களுக்கு நிச்சயம் கொண்டாட்டமான நாள் என்று தான் சொல்ல வேண்டும்.