தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
முத்துராமலிங்கம் படத்தை அடுத்து கெளதம் கார்த்திக் நடித்து வரும் படம் இவன் தந்திரன். இந்த படத்தை ஆர்.கண்ணன் இயக்கி வருகிறார். இப்படத்தில் கெளதமுக்கு ஜோடியாக மணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்தில் நாயகியாக நடித்து வரும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்து வருகிறார். இதுவரை காதல் கதை களில் நடித்து வந்த கெளதம், இந்த படத்தில் ஆக்சன் ஹீரோவாக வரிந்து கட்டுகிறார். அதோடு, சமூகநோக்கமுள்ள ஒரு கதையில் நடிக்கிறார்.
மேலும், இந்த ஆக்சன் படத்தில் அவருடன் வலுவான வில்லன்கள் மோதினால்தான் கதைக்கு வலு சேர்க்கும் என்பதால் இரண்டு மெகா பைட் மாஸ்டர்களை இந்த படத்தில் வில்லன்களாக்கியிருக்கிறார் ஆர்.கண்ணன். பிரபல பைட் மாஸ் டர் சூப்பர் சுப்பராயன் மற்றும் சில்வா ஆகிய இருவரும் இப்படத்தில் வில்லன் களாக உருவெடுத்துள்ளனர். தற்போது வசன காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில், இந்த இரண்டு பைட் மாஸ்டர்களுமே கெளதம் கார்த்திக்கிற்கு சண்டை பயிற்சியை கொடுத்து பின்னர் அவருடன் சண்டை காட்சிகளில் நடிக் கப்போகிறார்கள்.