ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
ரஜினி நடித்து வரும் 2.ஓ படத்தில் வில்லனாக நடித்து வருபவர் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். இந்தியில், ஜாலி எல்எல்பி-2 உள்பட இரண்டு படங்களில் தற்போது நடித்து வரும் அவர், அடுத்தபடியாக ஸ்ரீ நாராயன் சிங் என்பவர் இயக்கத்தில் டாய்லெட் ஏக் பிரேம் கதா -என்ற படத்தில் நடிக்கிறார். அக்சய்குமாருக்கு ஜோடியாக புமி பெட்னேகர் நடிக்கும் இந்த படம், வீட்டில் கழிவறை இல்லாவிட்டால் கணவன் மனைவிக்கிடையிலான காதல் சிதைந்து விடும் என்ற கருத்து அடிப் படையில் உருவாகிறது.
மேலும், சமீபகாலமாக கழிவறை இல்லாத வீட்டில் மருமகளாக மாட்டேன் என்று இந்தியாவிலுள்ள இளம் பெண்கள் கூறி வரும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது.அதனால் இந்த படத்தில் நடிப்பது இதுவே சரியான தருணம் என்று டுவிட் செய்துள்ள அக்ஷய் குமார், பாரத பிரதமர் மோடி தொடங்கியுள்ள தூய்மை இந்தியா திட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் இந்த படம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.