இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரபல தயாரிப்பாளர், இயக்குனர் சித்ரா லட்சுமணனின் சகோதராரும் தயாரிப்பாளருமான சித்ரா ராமு காலமானார். அவருக்கு வயது 73. சென்னை அசோக் நகரில் உள்ள வீட்டில் வசித்து வந்த ராமுக்கு நேற்று காலை உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலன் இன்றி மாலையில் இறந்தார். இன்று அவரது இறுதி சடங்குகள் நடக்கிறது. சித்ரா ராமுக்கு தங்கம் என்கிற மனைவியும், விஜய் சரவணன், விஜய் கார்த்தி என்ற இரு மகன்களும், குகப்ரியா என்ற மகளும் உள்ளனர்.
சித்ரா ராமு பாரதிராஜா இயக்கிய மண்வாசனை, கமலஹாசன் நடித்த சூரசம்ஹாரம், சிவாஜி, சத்யராஜ் நடித்த ஜல்லிக்கட்டு உள்பட 17 படங்களை தயாரித்தவர். அவரது உடலுக்கு தயாரிப்பு சங்க நிர்வாகிகள், மற்றும் திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.