தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து |
டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ஆக்ஷன் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தைத் தொடர்ந்து, இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாகக் கூறப்பட்டது. ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் ஜனதா கேரேஜ் எனும் வெற்றிப் படம் கொடுத்த இயக்குனர் கொரட்டாலா சிவா மகேஷ் பாபு நடிப்பில் ஸ்ரீமந்துடு எனும் சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்துள்ளார். ஸ்ரீமந்துடு படத்திற்கு பின்னர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் மீண்டும் மகேஷ் பாபு நடிக்கின்றார். இப்படத்தின் பூஜை நவம்பர் 9 தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் டி.வி.வி.தனய்யா தயாரிக்கும் இப்படத்தில், பணியாற்றவிருக்கும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகின்றதாம். இது வரை ஒரு படத்தை முடிக்காமல் அடுத்த படத்தில் நடிக்காத மகேஷ் பாபு முதல்முறை ஒரே நேரத்தில் இரு படங்களில் பணியாற்றவிருக்கின்றார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்புகள் குறித்த விபரங்கள் விரைவில் வெளிவரும் என கூறப்படுகின்றது.