நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ |
பொதுவாக வெளிநாடுகளில் ரிலீசாகும் இந்தியப்படங்களில் புதுப்புது சாதனைகளை உருவாக்கி கொண்டே செல்வது ரஜினி படமாகத்தான் இருக்கும்.. பாலிவுட் ஜாம்பவான்கள் கூட, ரஜினியின் பக்கத்தில் வந்து செல்வார்களே தவிர, அவரது சாதனைகளை முறியடித்ததில்லை.. ஆனால் முதன்முறையாக மத்திய கிழக்கு நாடுகளில் கபாலி, சுல்தான் ஆகிய படங்களின் சாதனையை ஓவர்டேக் செய்துள்ளது மோகன்லால் நடித்த 'புலி முருகன்'.
ஆம்.. நேற்று முன் தினம் (நவ-3) அன்று அரபு நாடுகளில் புலி முருகன் படம் வெளியானது. இதற்கு முன் கபாலி படம் 425 காட்சிகளும், சல்மான் நடித்த 'சுல்தான்' 225 காட்சிகளும் தான் முதல் நாள் அதிகபட்ச காட்சிகளாக இடம்பிடித்திருந்தன.. ஆனால் புலி முருகன் படத்திற்கோ முதல் நாளே 630 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது, அதுமட்டுமல்ல காட்சிகள் அத்தனையும் ஹவுஸ்புல்லாகி விட்டனவாம்.
இன்னொரு கொசுறு செய்தி.. போலந்து நாட்டில் திரையிடப்பட்டுள்ள முதல் மலையாளப்படம் என்கிற பெருமையையும் 'புலி முருகன்' பெற்றுள்ளது.