ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆல்பம் இசை அமைப்பாளர் மற்றும் பாடகராக இருந்து ஆம்பள படத்தின் மூலம் இசை அமைப்பாளர் ஆனவர் ஹிப் ஆப் தமிழா ஆதி. அவர் இப்போது ஹீரோவானதோடு, இயக்குனராகவும் ஆகிவிட்டார். மீசையை முறுக்கு படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை எல்லாமே அவர்தான். ஆத்மிகா ஹீரோயின். அவ்னி சினி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் சுந்தர்.சி தயாரிக்கிறார்.
படத்தை திட்டமிட்டு, ஒத்திகை பார்த்து பணியை ஆரம்பித்தார் ஆதி. திட்டமிட்டபடி 40 நாள் ஒரே ஷெட்யூலில், சொன்ன பட்ஜெட்டில் படத்தை எடுத்து சுந்தர்.சியின் பாராட்டுகளை பெற்று விட்டார் ஆதி. இசைத் துறையில் சாதிக்கத்துடிக்கும் ஒரு இளைஞன் சந்திக்கும் பிரச்சினைகளை காமெடியா சொல்லும் படம். கிட்டத்தட்ட ஹிப்ஆப் தமிழா ஆதியின் சொந்தக் கதை மாதிரிதான். தற்போது பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடந்து வருகிறது. டிசம்பரில் வெளிவருகிறது. படம் ஹிட்டானால் விலை உயர்ந்த சொகுசு காரை ஆதிக்கு பரிசளிக்க தயாராகி வருகிறார் சுந்தர்.சி.