ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி ஆகிய ஹிட் படங்களை அடுத்தடுத்து இயக்கியவர் பேரரசு. அதன்பிறகு அஜீத் நடிப்பில் திருப்பதி, விஜயகாந்த் நடிப்பில் தர்மபுரி என ஊர்களின் பெயர்களில் பல படங்களை இயக்கிய அவர், பரத் நடித்த திருத்தணி படத்திற்கு பிறகு மலையாளத்தில் ஒரு படத்தை இயக்கினர். அதன்பிறகு ரூ என்ற படத்தில் நடித்து வரும் பேரரசு, புதுமுகங்களை வைத்து ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் இருக்கிறார்.
இந்த நிலையில், சிவகாசி படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய்யை வைத்து அவர் இயக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுபற்றி அவரைக்கேட்டால், விஜய்யை வைத்து நான் இயக்கிய திருப்பாச்சி, சிவகாசி ஆகிய படங்களின் இரண்டாம் பாகத்திற்கான கதைகள் என்னிடம் உள்ளன. ஆனால், அதுபற்றி விஜய்யிடம் இதுவரை நான் பேசவில்லை. அதேசமயம், அவரை இயக்க வேறு சில புதிய கதைகள் வைத்திருக்கிறேன். விரைவில் அவரை சந்தித்து அந்த கதைகளை சொல்லி, அதில் அவருக்கு பிடித்த கதையில் அவரை மீண்டும் இயக்குவேன் என்கிறார் பேரரசு.