Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

12-ஆம் வருடத்தில் அடியெடுத்து வைத்த 'ராஜமாணிக்கம்'..!

03 நவ, 2016 - 17:26 IST
எழுத்தின் அளவு:
Rajamanikam-in-12th-year

ஒவ்வொரு ஹீரோவுக்கும் எத்தனை படங்கள் வந்தாலும் சில படங்கள் மட்டுமே காலம் கடந்து மறக்காமல் ரசிகர்களால் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப்படுகின்றன.. இன்னும் சில சூப்பர்ஸ்டார் ஹீரோக்களுக்கு அவரது பேவரைட் படம் என ஒரு படம் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்திருக்கும்.. அந்த வகையில் ரஜினிக்கு 'பாட்ஷா' போல மலையாளத்தில் மம்முட்டிக்கு 'ராஜமாணிக்கம்' படம்.. இந்தப்படம் வெளியாகி நேற்றோடு 11 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று 12ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனையொட்டி மம்முட்டி ரசிகர்கள் இதனை பல இடங்களிலும் விழாவாக கொண்டாடி வருகின்றனர்.


ஓர் அறிமுக இயக்குனராக 2௦௦5ல் மம்முட்டியை வைத்து அன்வர் ரஷீத் இயக்கிய 'ராஜமாணிக்கம்' என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் மற்ற முன்னணி நடிகர்களையும், ஏன் இயக்குனர்களையும் கூட வாய்பிளக்க வைத்தது. இன்றும் கூட விஷேச தினங்களில் மற்ற மலையாள சேனல்களில் எத்தனை புதுப்படங்களை ஒளிபரப்பினாலும், ஒரு குறிப்பிட்ட சேனல் மட்டும் நம்ம ஊரில் 'பாட்ஷா'வை களம் இறக்குவது மாதிரி அங்கே 'ராஜமாணிக்கம்' படத்தை தான் ஒன்மேன் ஆர்மியாக களம் இறக்கிவருகிறது. பத்து வருடத்திற்கு முன்னரே 23 கோடி ரூபாய் வசூலித்த படம் என்கிற சாதனையையும் இந்தப்படம் செய்தது. மம்முட்டிக்கு காமெடி வராது, ஒர்க் அவுட் ஆகாது என அதுவரை இருந்த மாயையை அடித்து தகர்த்தது.


கணவனை இழந்து பத்து வயது மகனுடன் வசிக்கும் பெண், மனைவியை இழந்து எட்டு வயது மகனுடன் இருக்கும் செல்வந்தன் இருவருக்கும் திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது. வித்தியாசமான முறையில் அண்ணன், தம்பி, தங்கையான இந்த மூவரை வைத்தும், அவர்களுக்கு இடையேயான சொத்து பிரச்சனையை வைத்தும் மிக அற்புதமான ஆக்சன் படமாக இதுவரை சொல்லப்படாத கோணத்தில் இந்தப்படம் வெளியானது. இடது கண் பார்வை போன மம்முட்டியின் கூலிங் கிளாஸ் கெட்டப்பும், படம் முழுவதும் அவர் பேசிய திருவனந்தபுர பாஷையும் மற்றும் சில கமர்ஷியல் அமசங்களும் இரண்டரை மணி நேர படத்தை ஒரு துளி கூட போரடிக்காமல் நகரத்தின.. படத்தின் வெற்றிக்கு நூறு காரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.. ஆனால் அதுதான் ரசிகர்கள் 11 வருடம் கழித்தும் இந்தப்படத்தை கொண்டாட காரணம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in