ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் ஜோடியாக ‛தமிழன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. தமிழில் பெரிய வாய்ப்பு வரும் என்று காத்திருந்தவருக்கு ஏமாற்றம், இதனால் பாலிவுட் சென்றவர் அங்கு பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது ஹாலிவுட்டிலும் என்ட்ரியாகி உலகின் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்.
தற்போது பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் நடிகர் டுவென் ஜான்சன் உடன் ‛‛பேவாட்ச்'' படத்தில் நடித்து வருகிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பிரியங்கா சோப்ரா, கருப்பு நிற உடையில், பின்னணியில் இறக்கைகளுடன், உதட்டின் ஓரத்தில் சிறிது ரத்தம் வடிந்தபடியும், தொடையில் துப்பாக்கியுடனும் போஸ் கொடுத்திருக்கிறார். பிரியங்கா சோப்ராவின் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் ரிலீஸாக உள்ளது.