‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தான் உண்டு; தன் வேலை உண்டு என, சமத்துப் பிள்ளையாக இருப்பதால் தான், விஜய் சேதுபதிக்கு, அடுத்தடுத்து, ஏராளமான படங்கள், 'புக்' ஆகின்றனவாம். மாதத்துக்கு ஒரு படம் ரிலீஸ், வெற்றி என, அவருக்கு சாதகமான சூழல், கோலிவுட்டில் நிலவினாலும், எந்தவித வெட்டி பந்தா எதுவும் இல்லாமல், எப்போதும் போல், எளிமையாகவே வலம் வருகிறார். ஒரு படம் ஹிட் கொடுத்தாலே, சீன் போடும் நடிகர்களுக்கு மத்தியில், விஜய் சேதுபதி, ஒரு ஆச்சரிய அதிசயம் தான் என, பாராட்டு பத்திரம் வாசிக்கிறது கோலிவுட். அடுத்ததாக, புரியாத புதிர் என்ற பெயரில், காயத்ரியுடன், அவர் நடித்துள்ள படம் திரைக்கு வர தயாராகி உள்ளது. விஜய் சேதுபதி என்றாலே, வித்தியாசமான படங்களை தருபவர் என்ற பேச்சு, ரசிகர்கள் மத்தியில் இருப்பதால், இந்த படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.