ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாள நடிகை மிருதுளா முரளி. தமிழில் நாகராஜசோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ, சிக்கிக்கு சிக்கிக்கிச்சு படங்களில் நடித்தார். தமிழில் வாய்ப்புகள் குறையவே மலையாளப் படங்களுக்கே திரும்பி விட்டார்.தற்போது இந்திப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதில் அவர் இந்திய சுதந்திர போராட்ட வீராங்கணையும், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பெண்கள் பிரிவு தளபதியுமாக இருந்த லட்சுமி சேகலின் கேரக்டரில் நடிக்கிறார். 'ராக்தேஷ் பர்த் ஆஃப் ஏ நேஷன்' என்ற இந்த படத்தை திக்மன்சு துலியா என்பவர் தயாரித்து, இயக்குகிறார். குனால் கபூர், மோகின் மர்வா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
“இணைய தளத்தில் எனது போட்டோக்களை பார்த்து என்னை இந்த கேரக்டருக்கு தேர்வு செய்திருக்கிறார்கள். ஒருவருடைய நிஜ கேரக்டரில் நடிக்கும்போது நிறைய எச்சரிக்கை உணர்வு தேவை அதை நான் உணர்கிறேன். மகத்தான இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள இருக்கிறேன். லட்சுமி சேகல் அன்னையாரின் வாழ்க்கையை படித்து வருகிறேன். அடுத்த மாதம் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன். முதல்கட்ட படப்பிடிப்பில் இளம் வயது லட்சுமி சேகலாக நடிக்கிறேன்” என்கிறார் மிருதுளா முரளி.