அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி தயாரித்து வரும் படம் கடம்பன். ஆர்யா நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை மஞ்சப்பை ராகவன் இயக்கியுள்ளார். பழங்குடியின மக்கள் பிரச்சினையை மையமாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் காட்டுவாசி கேரக்டரில் நடித்துள்ளார் ஆர்யா. ஏதாவது வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக இந்த கேரக்டருக்காக கடுமையாக உழைத்துள்ள அவர், ஒரு காட்சியில் யானைகளிடமிருந்து கேத்ரின் தெரசாவை காப்பாற்றும் அதிரடியான காட்சியிலும் நடித்திருக்கிறார். அதனால் ஆர்யா நடித்த படங்களில் அவருக்கு இது வித்தியாசமான படமாக இருக்கும் என்கிறார்கள்.
மேலும், இந்த படத்தை எப்படியேனும் வெற்றி படமாக்கி விட வேண்டும் என்பதற்காக பெரிய அளவில் பப்ளிசிட்டி செய்ய திட்டமிட்டுள்ள ஆர்யா, படம் வெளியானதும் சில முக்கிய நகரங்களில் உள்ள தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்கள் முன்பு தோன்றப்போகிறாராம். முன்னதாக, இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை சூர்யா, கார்த்தி, விஷால் ஆகியோரை வைத்து வெளியிடப்போவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு டுவிட் செய்திருந்தார் ஆர்யா. ஆனால், இன்று கடம்பன் பர்ஸ்ட் லுக்கை கார்த்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.