'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட் கடந்து ஹாலிவுட்டிலும் நடித்து கொண்டிருக்கும் நடிகைகளில் தீபிகா படுகோனேவும் ஒருவர். இப்போது சஞ்சய் லீலா பன்சாலி இயக்கவுள்ள ‛பத்மாவதி படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இப்படத்தில் ராணி பத்மாவதியாக நடிக்கிறார் தீபிகா.
இதனிடையே ஹாலிவுட்டில் பிரபல நடிகர் வின் டீசல், XXX Return of Xander Cage என்ற படத்தில் தீபிகா நடித்துள்ளார். சமீபத்தில் நடந்த ஒரு திரைப்பட விழாவில் பங்கேற்ற வின் டீசல், தீபிகாவுடன் நடித்ததை பற்றி புகழ்ந்து பேசியிருக்கிறார்.
இதுப்பற்றி வின் டீசல் கூறியதாவது.... "முதலில் எனக்கு தீபிகாவை மிகவும் பிடித்திருக்கிறது. அவருடன் நடித்த ஒவ்வொரு காட்சிகளும் மிகவும் பிடித்து உள்ளது. காதல் காட்சிகளில் இருவரிடத்திலும் இயற்கையாகவே நல்ல கெமிஸ்ட்ரி இருக்கிறது, அது படத்தில் மிகவும் அருமையாக வந்துள்ளது. தீபிகா மீது நான் கொண்டு உள்ள அன்பே கூற வார்த்தைகளே இல்லை. தீபிகாவின் முதல் ஹாலிவுட் படத்தில் அவருடன் நடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனென்றால், இந்தியாவில் இருந்து ஒரு உலக சூப்பர் ஸ்டார் வருவது நிச்சயம் " என்றார்.