ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜயசேதுபதியுடன் போட்டி போடும் அளவுக்கு ஒரே நேரத்தில் ஐந்து படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தை அடுத்து புரூஸ்லி, கடவுள் இருக்கான் குமாரு ஆகிய படங்கள் அவர் நடிப்பில் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளன. அதையடுத்து அடங்காதே, 4 ஜி மற்றும் ராஜீவ்மேனன் இயக்கும் படம் என பிசியாக நடித்து வருகிறார்.
மேலும், ரஜினி, அஜித், விஜய், டி.ராஜேந்தர் போன்ற நடிகர்களின் ரசிகராக பல நடிகர்கள் நடித்துள்ள நிலையில், புருஸ்லீ படத்தில் மன்சூரலிகானின் ரசிகராக ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ளார். மன்சூரலிகானின் வெறித்தனமான ரசிகரான ஜி.வி.பிரகாஷ் அவருக்கு போஸ்டர் ஒட்டுவது, கட்அவுட் வைப்பது என அதிரடியாக நடித்துள்ளாராம். அதோடு அவர் ஸ்டைலில் அவ்வப்போது டயலாக்கும் பேசி கலக்கல் செய்திருக்கிறாராம். அவருடன் டார்லிங் படத்தில் நடித்த மொட்டை ராஜேந்திரன், பாலசரவணன் ஆகியோரும் இந்த படத்தில் இணைந்திருப்பதால், புருஸ்லீயில் காமெடியும் பெரிய அளவில் ஒர்க்அவுட்டாகியுள்ளதாம்.