Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நேத்ரா படத்துக்காக பாடிலாங்குவேஜை மாற்றினேன்! -சுபிக்ஷா பேட்டி

31 அக், 2016 - 08:26 IST
எழுத்தின் அளவு:
i-changed-my-body-launage-for-the-movie-nethra

பாரதிராஜாவின் அன்னக்கொடி படத்தில் அறிமுகமானவர் சுபிக்ஷா. அதன்பிறகு நினைத்தது யாரோ என்ற படத்தில் நடித்த அவர் தற்போது கடுகு, ரா ரா ராஜசேகர், நேத்ரா, பொதுநலன் கருதி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில், நேத்ரா படத்தில் டைட்டீல் ரோலில் நடிக்கும் சுபிக்ஷா, அந்த கேரக்டருக்காக தனது பாடிலாங்குவேஜையே மாற்றி ஹோம் ஒர்க் செய்து நடித்து வருவதாக சொல்கிறார்.


அதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், விஜய் மில்டன் இயக்கத்தில் நடித் துள்ள கடுகு படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்துள்ளேன். இந்த வருடத்தில் திரைக்கு வரும் இந்த படத்தில் எனக்கு புதுமையான கதாபாத்திரம். சென்னை பெண்ணாக ஹோம்லி மற்றும் மாடர்ன் கெட்டப்பில் நடித்துள்ளேன். எனக்கும், பரத்துக்கும் மான்டேஜ் சாங் உள்ளது.


அதையடுத்து, பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் நடித்துள்ள ரா ரா ராஜசேகர் என்ற படத்தில் புதுமுக நாயகன் மதிக்கு ஜோடியாக நடித்துள்ளேன். இன்னும் ஒரு வாரம் படப்பிடிப்பு பேலன்ஸ் உள்ளது. திருப்பதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. அடுத்து, பொதுநலன் கருதி என்ற படத்தில் தங்கமகனில் எமிஜாக்சனுக்கு பேராக நடித்த அஜீத்துடன் நடித்துள்ளேன்.


இதன்பிறகு தற்போது நான் நடித்து வரும் இன்னொரு முக்கியமான படம் நேத்ரா. ஏ.வெங்கடேஷ் இயக்கி வரும் இந்த படத்தில் நான் டைட்டீல் ரோலில் நடிக்கிறேன். ரொம்ப வெயிட்டான வேடம். தமன், வினய் நாயகர்களாக நடிக்கும் இந்த படம் க்ரைம் திரில்லர் கதையில் உருவாகிறது. இதில் திருமணத்திற்கு முன்பு, பின்பு என இரண்டுவிதமான கெட்டப்பில் நடிக்கிறேன். அதனால் முதலில் ஸ்லிம் பெண்ணாகவும், திருமணத்திற்கு பிறகு வெயிட் போட்ட குடும்ப பெண்ணாகவும் நடிக்கிறேன். இதற்காக 4 கிலோ வரை வெயிட் போட்டு எனது பாடிலாங்குவேஜை மாற்றினேன். முக்கியமாக, நிறைய ஹோம் ஒர்க் செய்து நடித்து வருகிறேன்.


இந்த படத்தின் கதை கனடாவில் நடப்பது போல் உள்ளது. அதனால் இதுவரை சென்னையில் நடந்த படிப்பிடிப்பில் கலந்து கொண்டேன். அடுத்து விசா வந்த தும் அனைவரும் கனடா செல்கிறோம். அங்குதான் முக்கியமான காட்சிகள் படமாகிறது. அந்த வகையில், இந்த நேத்ரா படம் எனது கேரியரில் முக்கியமான படமாக இருக்கும் என்கிறார் சுபிக்ஷா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in