ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் |
இப்போதுள்ள எல்லா நடிகைக்கும் பேயாக நடிப்பதுதான் லட்சியம் போலிருக்கிறது. அதனால் பேய் படங்களை தேடித் தேடி நடிக்கிறார்கள். நயன்தாரா, த்ரிஷா முதல் அறிமுகமாகும் நடிகை வரை பேய் படங்களில் நடிக்க விரும்புகிறார்கள். அட்டக்கத்தி முதல் காக்கா முட்டை வரை நல்ல கேரக்டர்களில் நடித்து புகழ்பெற்ற ஐஸ்வர்யா ராஜேசும் மோ என்ற படத்தில் பேயாக நடித்திருக்கிறார்.
இயக்குனர்கள் செல்வா, ஹோசிமினிடம் உதவியாளராக இருந்த புவன் ஆர்.நல்லான் இயக்கி உள்ள படம் மோ. இதில் ஐஸ்வர்யா ராஜேசுடன் சுரேஷ் ரவி, யோகிபாபு, முனீஷ்காந்த், ரமேஷ் திலக், தர்புகா சிவா, மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமானின் உதவியாளர் சந்தோஷ் தயாநிதி இசை அமைக்கிறார், பாலசுப்பிரமணியத்தின் உதவியாளர் விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார் ரோகில் ரமேஷ் தயாரிக்கிறார்.