ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை கவுதமி. தற்போது நடிகர் கமல்ஹாசன் உடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். கமலின் படங்களில் காஸ்ட்யூம் டிசைனராகவும், அவருடன் பாபநாசம் படத்திலும் ஜோடியாக நடித்தார். தற்போது மீண்டும் சினிமாவில் தனக்கு ஏற்ற வேடங்களில் நடித்து வரும் கவுதமி, தமிழ் மட்டுமல்லாது மலையாள சினிமாவிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை, நடிகை கவுதமி திடீரென சந்தித்து பேசியுள்ளார். எதற்காக பிரதமரை சந்தித்தார் என்ற காரணத்தை கவுதமி கூறவில்லை. ஆனால் தன் டுவிட்டர் பக்கத்தில், ‛மோடியை சந்தித்தது த்ரில் அனுபவமாக இருந்தது, நடிகர்களும் பிரதமரை சந்திப்பது எளிதாக உள்ளது' என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். கூடவே மோடியுடனான சந்திப்பு குறித்த போட்டோவையும் பதிவிட்டுள்ளார்.
நடிகை கவுதமி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர். புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் அதிகம் பங்கேற்பார். தனியாக ஒரு அமைப்பு ஒன்றும் நடத்தி வருகிறார். பிரதமர் மோடியை சந்தித்தது கூட புற்றுநோய் தொடர்பான விஷயம் தான் என்று கூறப்படுகிறது.