Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழில் சிறந்த அடித்தளமாக சென்னை 28 - II படம் இருக்கும் - சனா அல்தாப்

28 அக், 2016 - 13:26 IST
எழுத்தின் அளவு:
Sana-Althab-happy-about-Tamil-debut

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா முதல், தற்போதைய மஞ்சிமா மோகன் வரை பல பெண் நட்சத்திரங்கள், கேரளாவில் இருந்து தான் உதயமாகி இருக்கின்றனர். தற்போது அந்த வரிசையில் சென்னை - 28 - II திரைப்படத்தின் மூலம் இணைந்திருக்கிறார் கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்ற, 17 வயது நிரம்பிய சனா அல்தாப். பிளாக் டிக்கெட் கம்பெனி சார்பில் வெங்கட் பிரபு தயாரித்து இயக்கி இருக்கும் இந்த சென்னை - 28 - II படத்திற்கு இசையமைத்திருக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா.


தன்னுடைய தமிழ் என்ட்ரி பற்றி சனா அல்தாப் கூறியிருப்பதாவது... "என்னுடைய பொது தேர்வினால் நான் சில மாதங்கள் நடிப்பில் இருந்து விலகி இருக்கும் சூழ்நிலை இருந்தது. அதன் காரணமாக என்னால் நடிப்பில் சரிவர கவனம் செலுத்த முடியவில்லை. ஆனால், வெங்கட் பிரபு சார் எனக்கு அளித்த தன்னம்பிக்கையும், ஊக்குவித்தலும், என்னை மீண்டும் நடிப்பில் களம் இறக்கியது. இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடிக்கும் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் அனுராதா. வெறும் கவர்ச்சி மூலம் படத்தை ஒப்பேற்றும் ஒரு சாதாரண கதாபாத்திரமாக இல்லாமல், கதை களத்தை மேற்கொண்டு நகர்த்த கூடிய வலுவான வேடமாக என்னுடைய கதாபாத்திரம் அமைந்திருப்பது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது.


ஆரம்பத்தில் தமிழ் எனக்கு சிறிது கடினமாக இருந்தாலும், வெங்கட் பிரபு, எனக்கு கொடுத்த முறையான பயிற்சி அந்த கஷ்டத்தை எளிதாகி விட்டது. கலைஞர்களுக்கு சிறந்த ஆசானாக திகழ்பவர் வெங்கட் பிரபு. தமிழ் திரையுலகில் முதல்முறையாக காலடி எடுத்து வைக்கும் எனக்கு, நிச்சயமாக சென்னை - 28 - II திரைப்படம் சிறந்ததொரு அடித்தளமாக அமையும்" என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் அழகும், ஆற்றலும் ஒருங்கே பெற்ற சனா அல்தாப்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in