ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
பரத்தும், ‛மதயானை கூட்டம்' கதிரும் இணைந்து நடிக்கும் படம் ‛என்னோடு விளையாடு', சாந்தினி, பரத் ஜோடியாகவும், சஞ்சிதா ஷெட்டி, கதிர் ஜோடியாகவும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர ராதாரவி, யோக் ஜேப்பி, வெங்கடேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். யுவா ஒளிப்பதிவு செய்கிறார், சுதர்சன்.எம்.குமார் இசை அமைக்கிறார். இது குதிரை பந்தையத்தை அடிப்படையாக வைத்து தயாராகும் படம். படப்பிடிப்புகள் முடிந்து படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் நடந்து வருகிறது. அடுத்த மாதம் பாடல்களையும், டிசம்பரில் படத்தையும் வெளியிடுகிறார்கள்.
"இது குதிரைப் பந்தைய படமாக இருந்தாலும் அடிப்படையில் சூதாட்ட படம். இந்தியாவில் பல ஊர்களில் குதிரைப்பந்தையம் சூதாட்டமாக நடந்து வருகிறது. அந்த ஊர்களுக்கு சென்று ஆய்வு செய்து திரைக்கதை அமைத்திருக்கிறேன். குதிரை பந்தையத்தையே வாழ்க்கையாக கொண்ட ஒரு இளைஞனும், எந்த சமூக பொறுப்பும் இல்லாமல் இருக்கும் ஒரு ஐ.டி இளைஞனும் சந்தித்துக் கொள்ளும்போது நடக்கும் நிகழ்வுகள்தான் கதைகளம். படத்தின் கடைசி 20 நிமிடங்கள் கிளைமாக்ஸ். இதுவரை தமிழ் சினிமாவில் படமாக்கப்படாத விதத்தில் குதிரை பந்தையத்தை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது" என்கிறார் இயக்குனர் அருண் கிருஷ்ணசாமி.